பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்




டெல்லி: பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நள்ளிரவில் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து  ஜூலை 16 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு நள்ளிரவு 12 அமலாகும் விலை மாற்ற அறிவிப்பு காலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url