அஸ்பிரின் மருந்தால் வயிற்றில் அதிகரிக்கும் ரத்தப்போக்கு - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு




முன்பு கருதப்பட்டதை விட அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வது அதிக ஆபத்தானது, குறிப்பாக வயதானவர்கள் எடுத்துக்கொள்வதில் பிரச்சனை உள்ளது என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது.

ஆஸ்பிரின் மருந்து பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது. நெடுங்காலமாக ரத்தப்போக்கு குறிப்பாக வயிற்றில் இருந்து அதிகரிக்கும் ஆபத்தோடு ஆஸ்பிரின் தொடர்புபடுத்தப்பட்டது.

இந்த ஆபத்து 75 வயதுக்கு அதிகமானவர்களிடையே கணிசமாக உள்ளது என்று இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் லான்சென்ட் மருத்துவ சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளன.

இந்த வயதில் உள்ள எவரும் ஆஸ்பிரின் சிகிச்சையுடன் வயிற்றுப் பாதுகாப்புக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தற்போதும் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் அதனால் ஏற்படும் ஆபத்துகளைவிட அதிகமாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url