சோஃபியா என்னும் ரோபோ மனிதி




“உங்கள் வீட்டில் ஒரு ரோபோ வாழ ந்தால் நீங்கள் அதை எப்படி உணர்வீர்கள்?”, என்று கேட்கும் இந்த மனிதரையொத்த ரோபோவின் பெயர் சோஃபியா.
இவரால் உங்களிடம் உரையாட முடியும். அறுபதுக்கும் அதிகமான உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தவும் முடியும்.
ஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் புது நிறுவனம் உருவாக்கிய இந்தரக முதலாவது ரோபோ இவர்.

மனிதர்கள் பேசுவதை இவர் புரிந்துகொள்வார். மனிதர்களுடனான தனது தொடர்பாடல்களையெல்லாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்வார்.
நடிகை ஆட்ரே ஹெப்பர்னின் முகம் போன்றே இவர் முகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் இவர் நன்கு அறிமுகமான முகமாக தெரிகிறார்.
இவர் தலையிலுள்ள கேமெராக்கள், கணினிகள் மூலம் இவரால் பார்க்க முடியும். அடுத்தவர் முகங்களை அடையாளம் காணவும் முடியும்.
“உணர்வுரீதியிலும் புத்திசாலியாக விரும்புவதாக”, கூறும் சோஃபியா, மனிதராக இருப்பதன் அர்த்தத்தையும் பயின்று வருவதாகவும் தெரிவிக்கிறார்.
தான் தொடர்ந்து புத்திசாலியாக முயல்வதாக கூறும் சோஃபியா, வெகுவிரைவில் தன்னால் மனிதர்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறார்
.
சோஃபியாவிடம் பல வியக்க வைக்கும் ஆற்றல்கள் இருந்தாலும் இரக்கத்தை வெளிப்படுத்த இவரால் இயலவில்லை.
ஆனாலும் சோஃபியா அசருவதாக இல்லை.

“மீண்டும் உங்களிடம் உரையாட முடியுமென நம்புகிறேன். இந்த நாள் உங்களுக்கு நல்லநாளாக அமைய வாழ்த்துக்கள்” என்கிறார் இவர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url