நடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை


கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவருமே தங்களுக்கென ஒரு இடத்தை திரையுலகில் பிடித்துள்ளனர். குறிப்பாக ஸ்ருதிஹாசன் பல்வேறு மொழிகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். அதேசமயம் அவரைப் பற்றிய கிசுகிசுவுக்கும் பஞ்சம் இல்லை. சித்தார்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுடன் அவர் நெருக்கமாக பழகி வந்ததாக ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் கிசுகிசுக்கள் பரவியது. பின்னர் அந்த நெருக்கம் முடிவுக்குவந்து விட்டதாக கூறப்பட்டது.

தற்போது லண்டன் நடிகர் மைக்கேல் கோர்சேலிடம் ஸ்ருதி நெருக்கமாக பழகுவதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. நடிகர்களுடனான தனது உறவுபற்றி இதுவரை பேசாமலிருந்த ஸ்ருதி சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பதில் அளித்திருக்கிறார். சிலருடனான உறவுகள் தோல்வியில் முடிந்தது ஏன் என்கின்றனர்.

எந்த ஒரு நபரும் எனது தனிப்பட்ட சுதந்திரத்திலும், நான் எடுக்கும் முடிவுகளிலும் தலையிடக்கூடாது என்று எண்ணுவேன். எனது வேலைக்கு குறுக்கீடாக யார் வந்தாலும் அவர்களை என் வாழ்விலிருந்து தள்ளியே வைப்பேன்’ என்றார். தற்போதைய பாய் ஃபிரண்ட் மைக்கேல் கோர்சேல் பற்றி ஸ்ருதி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url