Type Here to Get Search Results !

கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் உணவு வகைகள் பற்றி அறிவோம்!

கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன. அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும்.



அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான்  நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது  உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மைக் கொண்டது.

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும்  ஆற்றல் கொண்டவை.

பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு  சாப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது  உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக  சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

வெண்டைக்காய் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும்  குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன்  கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை  பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை  கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad