தாழம்பூ மணப்பாகு
தேவையான பொருள்கள்:
1.தாழம் பூ
2.நீர்
3.சர்க்கரை
செய்முறை:
> தாழம்பூவை சிறியதாக நறுக்கி நீர் விட்டு காய்ச்ச வேண்டும்.
> நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாகுபாதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
> இதேபோன்று தாழம்பூ வேரினை பயன்படுத்தியும் செய்யலாம்.
மருத்துவக்குணங்கள்:
1.இவ்வாறு தாழம்பூ மணப்பாகினை அருந்துவதால் உடல்சூடு தணியும். பித்தம் குறையும் அதிகளவில் சிறுநீர் வெளியாவதை தடுக்கலாம்.
2.தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வந்தால் அம்மைநோய் வராமல் தடுக்கலாம்.
3.தாழம்பு வேரினை கொண்டு தயாரித்த மணப்பாகினை உட்கொள்வதால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.