வரி ஏய்ப்பு வழக்கில் மெஸ்ஸிக்கு தண்டனை



மாட்ரிட்: அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிகளின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மீதான வரி ஏய்ப்பு வழக்கை விசாரித்த ஸ்பெயின் உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 21 மாத சிறை தண்டனையை உறுதி செய்தது. 2007-2009ல் விளம்பர ஒப்பந்தம் மூலமாக கிடைத்த பல கோடி ரூபாய் வருமானத்துக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றியதாக மெஸ்ஸி, அவரது தந்தை ஜார்ஜ் மீது பார்சிலோனா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலையில் மெஸ்ஸி மற்றும் அவரது தந்தைக்கு 21 மாத சிறை தண்டனை, 13 கோடியே, 20 லட்சம் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தில் மெஸ்ஸி தரப்பு மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தனர். எனினும், ஸ்பெயின் நாட்டு சட்டத்தின்படி வன்முறை சம்பந்தப்படாத முதல் முறை குற்றங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக விதிக்கப்படும் தண்டனை அமல்படுத்தப்படாது என்பதால், மெஸ்ஸிக்கு சிக்கல் ஏதும் இல்லை. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url