கல்லீரலை பலப்படுத்தும் நெல்லிக்காய்நமக்கு எளிதில், அருகில், சாலையோரங்களில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், செரிமானத்தை தூண்ட கூடியதும், கல்லீரலை பலப்படுத்தும் தன்மை கொண்டதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதுமான நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.

வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்ட நெல்லிக்காயை கொண்டு கல்லீரலை பலப்படுத்தி பசியை தூண்டும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நெல்லிக்காய், நல்லெண்ணெய், கடுகு, மஞ்சள் பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி, வரமிளகாய், உப்பு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும். இதனுடன் சிறிது பெருங்காயப்பொடி, கடுகு சேர்க்கவும். கடுகு பொறிந்ததும், ஏற்கனவே நெல்லிகாயை வேகவைத்து துண்டுகளாக்கி நீர்விடாமல் அரைத்து எடுத்த பசையை இதில் சேர்க்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, வெந்தய பொடி, கடுகு பொடி, வரமிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். நெல்லிக்காயில் ஈரப்பசை போகும் வரை கிளறி எடுக்கவும்.

இதை சாப்பிட்டுவர கல்லீரல் பலப்படும். நன்றாக பசி எடுக்கும். நெல்லிக்காயை ஊறுகாய் போன்று தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் சீராகும். கல்லீரல் பலப்படும். நெல்லிகாயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நோய் நம்மை நெருங்காது. நெல்லிக்காயை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் தித்திப்பு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நெல்லிக்காய், வெல்லம், சுக்குப்பொடி, ஜாதிக்காய்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்ல கரைசல் எடுக்கவும். இது, பாகு பதத்தில் வரும்போது, ஏற்கனவே வேகவைத்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் நெல்லிக்காயை சேர்க்கவும். இதில், சுக்குப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும். இது ஒருவாரம் வரை கெடாது. தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். புண்கள் ஆறும். செரிமானத்தை தூண்டும்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய் ஆயுளை அதிகரிக்க கூடியது. ஈரல், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும். சத்துக்கள் நிரம்பிய நெல்லிக்காயை பக்குவப்படுத்தி வைத்து கொண்டு பயன்படுத்துவதால் ஆரோக்கியம் ஏற்படும். நெல்லிக்காய் வேகவைத்து தயிரோடு சேர்த்து பச்சடியாக சாப்பிடும்போது, வயிற்று போக்கு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் சரியாகும். எனவே, எளிதில் கிடைக்க கூடிய நெல்லிக்காயை நாம் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.   நாள்பட்ட கழிச்சல், வயிற்றுபோக்கை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு அவல் அற்புதமான மருந்தாகிறது. அவலில் நீர்விட்டு வேகவைத்து உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சீதக்கழிச்சல் ஆகியவை வெகு விரைவில் குணமாகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )