கர்ப்பம் என தெரியாமல் வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது!



வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே போலி மருத்துவர் ஒருவரும் அவரது உதவியாளர் பெண் ஒருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.




ஜெயபால் என்பவர் தான் மருத்துவர் என கூறி ஆம்பூர் அருகே சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரிடம் சிறுமி ஒருவருக்கு வயிறு வலிக்கிறது என பெற்றோர்கள் கொண்டு வந்தனர். ஜெயபால் அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் வயிற்றுவலி குறையவில்லை.

பின்னர் அந்த சிறுமிக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த பின்னர் சிறுமி 6 மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. சிறுமி 6 மாதமாக கர்ப்பமாக இருக்கிறார் என்பது கூட தெரியாமல் ஜெயபால் அவருக்கு தொடர்ந்து வயிற்று வலிக்கான சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர்கள் சிறுமிக்கு அவசர அவசரமாக ஜெயபால் மூலம் கருக்கலைப்பு செய்தனர். பின்னர் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் ஒரு முதியவர் என தெரியவர சிறுமியின் தந்தை இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த ஜெயபால் ஒரு போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. அவர் சட்ட விரோதமாக சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததால் அவரையும் அவரது உதவியாளர் ஜெயலட்சுமி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url