எலும்புகளுக்கு பலம் தரும் கொடுக்காய் புளி

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில்  அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கொடுக்காய் புளியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.கோடைகாலத்தில் எளிதில்  கிடைக்க கூடிய கொடுக்காய் புளி, வைட்டமின் டி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டது.


கொடுக்காய் புளி இலைகளை பயன்படுத்தி வயிறு உப்புசத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: கொடுக்காய் புளி இலை, சீரகம், உப்பு.
செய்முறை: ஒரு ஸ்பூன் கொடுக்காய் புளி இலைகளை எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், உப்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி  குடித்துவர வாயு பிரச்னை சரியாகும். புற்றுநோய்க்கு காரணமான நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றில் உள்ள புண்களை குணமாக்கும். காய்ச்சலை தணிக்கும். வயிறு உப்புசம் விலகிபோகும்.  
கொடுக்காய் புளியின் இலை, காய் என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது.

கொடுக்காய் புளி காயை பயன்படுத்தி பல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: கொடுக்காய் புளி காய், லவங்கம், உப்பு. செய்முறை: கொடுக்காய் புளி காயின் விதைகளை நீக்கிவிட்டு சதையை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் 5 லவங்கம், சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாய் கொப்பளித்துவர பற்கள் பலம் பெறும். பல் வலி சரியாகும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம், ரத்த கசிவு சரியாகும். பற்கூச்சத்தை போக்கும். பற்களுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. வாயில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட கொடுக்காய் புளியானது அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. சிவப்பு, பசுமையான வண்ணத்தில் கிடைக்க கூடிய இது, எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது. தினமும் 4 கொடுக்காய் புளி சாப்பிட்டுவர எலும்பு பலவீனம் மாறும். எலும்பு தேய்மானம் இல்லாமல் போகும்
.
கொடுக்காய் புளி காயை பயன்படுத்தி நரம்புகளுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: கொடுக்காய் புளி காய், பால், தேன்.
செய்முறை: கொடுக்காய் புளியின் சதைப்பகுதி சுமார் 10 எடுத்து நீர்விட்டு வேகவைத்து எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால், தேன் சேர்த்து கலந்து குடித்துவர உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும். நரம்புகள் பலப்படும்.
கொடுக்காய் புளி காய் துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு சுவையுடையது. முற்றிய காய்களை மட்டுமே சாப்பிட வேண்டும். ரத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட கொடுக்காய் புளி வயிற்று போக்கை சரிசெய்யும். சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. கொடுக்காய் புளியை காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்திவர எலும்புகள் பலம்பெறும்.

வயிற்றில் உண்டாகும் எரிச்சலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். அதிக வெயிலால் உஷ்ணம் ஏற்பட்டு வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது. முறையற்ற உணவு பழக்கத்தால் குடல் புண் ஏற்பட்டு எரிச்சல் உண்டாகிறது. கரும்பு சாறுடன் சிறிது சுக்குப்பொடி சேர்த்து தினமும் ஒரு டம்ளர் குடித்துவர வயிற்று புண் ஆறும். வயிற்று வலி, எரிச்சல் குணமாகும். கரும்பு சாறு உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url