பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம்பிடித்த தனுஷ்: முடியாது என்ற ரஞ்சித்
பா. ரஞ்சித் ரஜினிகாந்தை மீண்டும் இயக்கும் படத்தில் ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக போடுமாறு தனுஷ் அடம்பிடித்தாராம். கபாலி படத்தை அடுத்து இயக்குனர் பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. ரஞ்சித், ரஜினி இணைந்துள்ள படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்
ஷான்
தனுஷ், இசையமைப்பாளர் அனிருதை பிரிந்த பிறகு இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு ஆதரவு அளித்து வருகிறார். ஷான் ஒரு ஜீனியஸ், சான்ஸே இல்லை என்று புகழ்ந்து வருவதுடன் தனது படங்களில் வாய்ப்பும் அளிக்கிறார். இசை கபாலி படத்தை போன்றே தனது இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஆக்க விரும்பியுள்ளார் ரஞ்சித். தனுஷோ தனக்கு பிடித்த ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக்க வேண்டும் என்று ரஞ்சித்திடம் கூறியுள்ளார்.
முடியாது எனக்கு சந்தோஷ் தான் சரிப்பட்டு வருவார், ஷான் வேண்டாம் என்று ரஞ்சித் தனுஷிடம் தெரிவித்துள்ளார். இதை தனுஷ் ஏற்பதாக இல்லை. பின்னர் தனுஷிடம் பேசி அவரை சமாதானப்படுத்தி சந்தோஷையே ஒப்பந்தம் செய்தார்களாம்.
கவுரவத் தோற்றம் மாமா ரஜினியின் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார் தனுஷ். என் கதைப்படி அது சரிப்பட்டு வராது. உங்களுக்காக நான் கதையை மாற்ற மாட்டேன் என்று ரஞ்சித் கறாராக கூறிவிட்டாராம்.