மியாமி கடற்கரையில் பிகினியில் குளியல் போட்ட பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட் கனவுக்கன்னி பிரியங்கா சோப்ரா, பேவாட்ச் என்ற ஹாலிவுட்டில் படத்தில் நடித்தார். இந்த படம் மே 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது மீண்டும் அவர் நடிக்க உள்ள படம், எ கிட் லைக் ஜேக். பால் பெர்னான் தயாரிக்கும் இதன் ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது.
இதன் காரணமாக பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா மயாமி பீச்சுக்கு சென்று அவ்வப்போது பிகினி உடையில் ஆனந்த குளியல் போட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நீல நிற பிகினியில் பிரியங்கா சோப்ராவை பார்த்த அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் தற்போது மீண்டும் பிகினியில் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.