சமந்தாவுடன் மேஜிக் செய்கிறார் விஜய்





விஜய் நடிக்கும் 61வது படத்தை அட்லி இயக்குகிறார். மொத்தம் 3 வேடங்களில் விஜய் நடிக்கிறார். சென்னை மற்றும் ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. பஞ்சாயத்து தலைவர் விஜய், நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்து டாக்டர் கேரக்டரில் விஜய் நடிக்க அவருடன் காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

இதையடுத்து சென்னை திரும்பும் படக்குழு ஜூன் மாதம் முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய்யின் 3வது கெட்டப்பான மேஜிக்மேன் கேரக்டர் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதில் மற்றொரு கதாநாயகியாக நடிக்கும் சமந்தா பங்கேற்க உள்ளார். மேஜிக் மேன் கதாபாத்திரத்துக்காக சில மேஜிக் டெக்னிக்குகளை விஜய் கற்றிருக்கிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url