அரைகுறை ஆடை வேணாமே? பூனம் அட்வைஸ்!
* விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா வாழ்க்கைக் கதையில் நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேசி வருகிறார்கள். இதுமாதிரி சீரியஸ் கதையில் அரைகுறை டிரெஸ் போட்டு நடிச்சிடாதீங்க என்று பிரியங்காவை ஜாலியாக கலாய்த்திருக்கிறார் பூனம் பாண்டே. யாரு என்ன அட்வைஸு பண்றதுன்னே இல்லையா? என்று பூனமை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் பாலிவுட்டில்.
* உட்தா பஞ்சாப் படத்துக்காக தனக்கு தேசிய விருது கிடைக்குமென்று பெரிதும் எதிர்பார்த்தார் அலியாபட். நடக்காமல் போனதால், பார்ப் பவர்களிடமெல்லாம் இந்தியாவுலே திறமைக்கு மதிப்பே கிடையாது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். நீ ஹாலிவுட்டுக்கே போயிடு அலியா என்று நக்கலாக அவரை வெறுப்பேற்றுகிறார்களாம்.
* பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எதிலுமே நடிப்பில் செல்ஃப் எடுக்காத நிலையில், போஜ்புரியில் தன்னுடைய சகோதரருடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார் நீதுசந்திரா. அதில் கொஞ்சம் காசு சேர்ந்த நிலையில் இந்தியில் சல்மானின் சகோதரர் அர்பாஜுடன் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார். இதனால் அடிக்கடி இருவரும் சேர்ந்து டிஸ்கஷன் நடத்துவதாக பாலிவுட்டில் பேச்சு.
* குடித்துவிட்டுத்தான் ட்விட்டரில் கண்டதையும் உளறிக் கொண்டிருந்தேன். தேவையில்லாத பகைகளை சம்பாதித்தேன். இனி சினிமாவில் முழுக் கவனம் செலுத்தப் போகிறேன் என்று பாவமன்னிப்பு கேட்டிருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.
* தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் ஹாலிவுட்டுக்கு போய் செழுமையாகி இருப்பதைக் கண்டதுமே அனுஷ்கா சர்மாவுக்கும் ஹாலிவுட் ஆசை எழுந்துள்ளதாம். ஒழுங்கா கண்ணாலம் கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துற வழியைப் பாரு. இந்த ஹாலிவுட் கஸ்மாலமெல்லாம் வேணாம் என்று அவரது காதலர் விராட் கோஹ்லி கோபப்பட, இருவருக்கும் இடையே விரிசல் விழுந்திருப்பதாகப் பேச்சு.