போலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று? பிரபாஸிடம் கெஞ்சிய ராணா




பாகுபலி படத்தில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்கள் ஹீரோ பிரபாஸ், வில்லன் ராணா. கடந்த 5 வருடமாக ஒரே படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். திரையில் எதிரிகளாக இருந்தாலும் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ராணா. அப்போது யாராவது ஒருவருக்கு திடீரென்று போன் செய்து பேச வேண்டும் என்று முடிவு செய்து தனது போனை பயன்படுத்தாமலே வேறொரு லேண்ட் லைன் போனிலிருந்து பிரபாஸ் செல் நம்பருக்கு போன் செய்தார்.

மறுமுனையில் பிரபாஸ் பேசினார். உடனே ராணா பதற்றமாக பேசுவதுபோல் குரலை வைத்துக் கொண்டு, ‘பிரபாஸ் என்னை போலீஸார் பிடித்து வைத்திருக்கிறார்கள். எனக்கு உதவி செய்து இதிலிருந்து மீட்டுச் செல்’ என்றார். ஆனால் பதற்றம் எதுவும் அடையாத பிரபாஸ், ‘ராணா நீ ஒன்றும் பயப்படாதே. அந்த போலீஸிடம் பாகுபலியின் உதவியாளராக உங்களை சேர்த்துவிடுகிறேன் என்று சொல். உன்னை விட்டுவிடுவார்’ என்றார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url