கவர்ச்சியால் வெடித்த பூகம்பம்!

சல்மான்கானின் தம்பி அர்பாஸ்கானை விவாகரத்து செய்த கையோடு, இளம் ஹீரோ அர்ஜுன்கபூருடன் தீவிர டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார் மலாய்க்கா அரோரா. அர்ஜுனைவிட மலாய்க்காவுக்கு அஞ்சு வயசு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்கானின் ‘தங்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு வந்திருக் கிறார் சைஃப் அலிகானின் மகள் சைரா. ‘ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்’ என்று சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா.


‘நூர்’ படத்துக்கு விமர்சனங்கள் நல்லபடியாக அமைந்தும் படம் படுதோல்வி அடைந்து விட்டதால் சோனாக்‌ஷி சின்ஹா சோகத்தில் இருக்கிறார். அவருடைய அம்மா வேறு, ‘நடிப்பையெல்லாம் மூட்டை கட்டிட்டு சீக்கிரம் கல்யாணம், காட்சின்னு செட்டில் ஆகிற வழியைப் பாரு’ என்று டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

‘ரப்தா’ படத்தில் நடித்தபோது இளம் ஹீரோ சுஷாந்த்சிங்குடன் ரொம்பவும் நெருக்கமாக பழகியிருக்கிறார் கீர்த்தி சனோன். படப்பிடிப்பு முடிந்த நாளிலிருந்தே கீர்த்தியை அவாய்ட் செய்கிறாராம் சுஷாந்த். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை காக்டெயில் பார்ட்டிகளில் தணித்துக் கொள்கிறாராம் கீர்த்தி.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது அக்‌ஷய்குமாருக்கு கிடைத்திருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.  நடுவராக இருந்த பிரியதர்ஷனின் ஆஸ்தான ஹீரோ என்பதால்தான் இந்த விருது கிடைத்தது என்று சொல்லப்படுவதால், அக்‌ஷய்குமார் நொந்து போயிருக்கிறார். ‘தேசிய விருதுக்கு நான் தகுதியற்றவனாக இருந்தால், மத்திய அரசு விருதை திரும்பிப் பெற்றுக் கொள்ளட்டும்’ என்று புலம்பித் தள்ளியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பார்ட்டிக்கு கேத்ரினா கைபின் கையைக் கோர்த்துக் கொண்டு ஜோடியாக வந்து இறங்கியிருக்கிறார் ரன்வீர் சிங். அவருடைய காதலியான தீபிகா, ‘கேத்ரினாவும், ரன்வீரும் நல்ல நண்பர்கள்’ என்று சமாளித்திருக்கிறார். ஆனால், உள்ளுக்குள் தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.

ஹூமா குரேஷி சினிமாவில் நடிப்பதற்கே அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு. இந்த லட்சணத்தில் படுகவர்ச்சியாக நடிப்பதால் வீட்டில் பூகம்பமே வெடித்து விட்டதாம். இப்போது மும்பையில் அப்பார்ட்மென்ட் எடுத்து தனியாக வசிக்கிறார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad