அனுஷ்கா பயணம் முடிந்தது, நிரந்தர ஓய்வா- ஏன் இப்படி ஒரு முடிவு?
அனுஷ்கா
அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நாயகி. பாகுபலி, ருத்ரமாதேவி, அருந்ததி என ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே தான் இவர் நடிப்பார்.
இந்நிலையில் அனுஷ்கா சமீபத்தில் தன் கோலிவுட் உதவியாளர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டாராம்.
மேலும், தெலுங்கில் 3 படங்கள் கமிட் ஆனதை வேகவேகமாக முடித்துக்கொடுத்து வருகின்றாராம்.
எப்போது வேண்டுமானாலும் இவரின் திருமண அறிவிப்பு வரலாம், மேலும் பிரமாண்ட யோகா மையம் ஒன்றையும் திறக்கவிருக்கின்றாராம்.
இனி தன் கவனம் முழுவதையும் அந்த யோகா மையத்தில் தான் என முடிவு எடுத்துள்ளாராம்.