4 ஹீரோயின்களுடன் நடிக்கும் அதர்வா




அதர்வா, சூரி நடிக்கும் புதிய படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஹீரோயின்களாக ரெஜினா கெசன்டரா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி போஹங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தேடல் உள்ளது. அந்த தேடலில் 4 பெண்களை சந்திக்கிறார் அதர்வா.

அந்த தேடலை தடுப்பது சுரளிராஜன். அந்த தேடல் என்பது சஸ்பென்ஸ். தமிழ் சினிமாவில் தனது காதலை கடைசி வரை சொல்லாத நடிகர் முரளி. ஆனால் அவரது மகன் அதர்வா காதலில் புகுந்து விளையாடி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, எம்.ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url