வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்: 20 கோடி இந்தியர்கள் பயன்படுத்துவதாக தகவல்
கலிபோர்னியா: வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும் நாளொன்றுக்கு 34 கோடி நிமிடத்துக்கு வீடியோ கால் செய்யப்படுவதாக கூறியுள்ள அந்நிறுவனம், இதில் இந்தியர்கள் 5 கோடி நிமிடத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 120 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதாகவும், இதில் இந்தியர்கள் 20 கோடி பேர் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. வீடியோ காலிங் வசதி இந்திய மக்களுக்கு மிகவும் முக்கியமான தேவை என்று கூறியுள்ள வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜன் கோயும், இதை அறிமுகப்படுத்தியதன் மூலம் தங்களது நிறுவனம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.