மதுபோதையில் பிரபல கிரிக்கெட் வீரர் செய்த அசிங்கமான செயல்
விருது வழங்கும் விழாவில் மது குடித்துவிட்டு முறையற்ற விதத்தில் கருத்து கூறிய அவுஸ்திரேலியா வீரர் ஓகீஃபுக்கு 20000 டொலர் அபராதமும், உள்நாட்டு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஓகீஃப் உள்ளூர் போட்டினான நியூசவுத்வேல்ஸ் கிரிக்கெட் சீசனில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது மது போதையில் பொது வெளியில் முறையற்ற முறையில் அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் குடித்து விட்டு முறைகேடாக நடந்ததாக ஓகீஃப் மீது புகார் எழுந்தது. இரண்டாவது முறையாக அவர் இப்படி செய்ததால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் அவருக்கு 20000 டொலர் அபராதமும், உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தடையும் விதித்துள்ளது. இந்நிலையில், ஓகீஃப் குடிபோதையில் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய பூனே டெஸ்டில் அசத்தலாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்தது ஓகீஃப் தான் என்பது குறிப்பிடத்தக்கது