தரவரிசையில் சிந்து முன்னேற்றம்
புதுடெல்லி,
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2 இடங்கள் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் ஒரு இடம் உயர்ந்து
8-வது இடத்தில் இருக்கிறார். ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், சிங்கப்பூர் ஓபனில் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 8 இடம் முன்னேறி 21-வது இடத்தையும், சிங்கப்பூர் ஓபன் சாம்பியனான இந்திய வீரர் சாய் பிரனீத் 8 இடங்கள் எகிறி 22-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இன்னொரு இந்திய வீரர் அஜய் ஜெயராம் 13-வது இடம் வகிக்கிறார்.