Type Here to Get Search Results !

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா வந்தமையால் பதற்றம் அதிகரிப்பு


சியோல்,

வடகொரியா மீண்டும் அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடலாம் என்ற கவலையானது அதிகரித்து வரும்நிலையில் அமெரிக்காவின் நீர்முழ்கி கப்பலானது தென் கொரியா அடைந்து உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே அனுப்பிய யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியுடன் ஏவுகணைகள் தாங்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிசிகான் நீர்மூழ்கி இணைகிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா படைகளை விஸ்தரிப்பதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது. வடகொரியா தன்னுடைய 85-வது ராணுவ தினத்தை இன்று கொண்டாடுகிறது. முந்தைய காலங்களில் வடகொரியா ராணுவ தினத்தை கொண்டாடும் போது ஏவுகணைகளை வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா மற்றும் வடகொரியா கடந்த சில வாரங்களாக கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டு உள்ளதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே எதிர்பாராத விதமாக வடகொரியா தொடர்பாக பேசுவதற்கு நாளை (புதன்கிழமை) அனைத்து செனட் உறுப்பினர்களும் வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்து உள்ளார். ஆணு ஆயுதங்களை தாங்கிய அமெரிக்காவின் மிசிகான் நீர்மூழ்கியானது தென் கொரியா வந்து உள்ளது, வடகொரியாவிற்கு கோபத்தை அதிகரிக்க செய்து வருகிறது.

மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் கூட்டு போர் பயிற்சிக்காக ஜப்பானின் 2 போர்க்கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளன. இருப்பினும் வடகொரியா அடங்குவதாக இல்லை. பாதுகாப்பு அரணாக அமைந்து உள்ளநிலையிலும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்தது. எந்தஒரு நேரத்திலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை தொடங்க வடகொரியா தயாராக உள்ளது என தென் கொரியா தெரிவித்தது. வடகொரியா மேலும் ஒரு அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருகிறது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அமெரிக்காவின் செயற்கைகோள் காண்பித்து உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad