Type Here to Get Search Results !

வட கொரியா பொம்மை ஆயுதங்களை வைத்து பலம் காட்டியுள்ளதை அமெரிக்க ராணுவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொம்மை ஆயுதங்களை வைத்து படம் காட்டிய வடகொரியா: ஆதாரத்துடன் வெளியிட்டது அமெரிக்கா


















வட கொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகளை தகர்ப்போம் என கூறி வருகிறது.

இதைத் தொடர்ந்து வடகொரியா வரலாறு காணாத வகையில் பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங்-உன் முன்னர் நடத்தியுள்ளது. இந்த பயிற்சியில் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றது.

கடந்த ஏப்ரல் 15ம் தேதி வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல் சொங்கின் 105 ஆவது பிறந்த முன்னிட்டு பியோங்யாங்கில் பாரிய இராணுவ அணிவகுப்பை நடத்தியது வட கொரியா.

கரையோரத்தில் 300 பெரிய துப்பாக்கி சுழற்சிகளால் இயக்கப்படும் துப்பாக்கி பீரங்கிகளிலிருந்து நெருப்புகள் பாய்ந்தது வட கொரியாவின் 85-வது இராணுவ வருடத்தை கொண்டாடும் விதத்திலும் இது நடைபெற்றது.

இந்நிலையில், அணிவகுப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த அமெரிக்க இராணுவ நிபுணர்கள் குழு, அணிவகுப்பின் போது பல இராணுவ வீரர்கள் வைத்திருந்தது பொம்மை ஆயுதங்கள் என கண்டறிந்துள்ளது.

வீரர்கள் பலர் அணிந்திருந்த கண்ணாடி கூட போலி என அமெரிக்க இராணுவ நிபுர்ணர்கள் குழு கூறியுள்ளது.
வட கொரியா வீரர்கள் வைத்திருந்து பல துப்பாக்கிகள் உண்மையானவை அல்ல, உலகிற்கு தங்களின் வலிமையை காட்ட வீரர்களிடம் போலி ஆயுதங்களை வழங்கி அணி வகுப்பில் ஈடுபட வைத்துள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad