விதிமுறையை மீறியதாக தோனிக்கு எச்சரிக்கை
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான புனே அணியின் போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிமுறையை மீறியதான குற்றச்சாட்டில் தோனிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிராக நடந்து கொண்டதாக தோனி ஒப்புக் கொண்டதால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று ஐபிஎல் அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய விதிமீறலில் ஆட்ட நடுவரின் முடிவே இறுதியானது. நேற்றைய போட்டியில் கெய்ரன் பொலார்ட் சரியாக எல்.பி.யானார். ஆனால் நடுவர் நாட் அவுட் என்று தீர்ப்பளித்தார், தோனி டி.ஆர்.எஸ் மேல்முறையீடு கேட்டார். டி20 கிரிக்கெட்டில் டிஆர்எஸ். கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது, இதற்காகத்தான் தோனி எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.