Type Here to Get Search Results !

ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா குஜராத்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
   



கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள் ளது. சொந்த மைதானத்தில் இரு வெற்றிகளையும், வெளி மைதானங் களில் இரு வெற்றியும் கண்டுள்ளது. அதேவேளையில் கடந்த சீசனில் அறிமுக அணியாக 3-வது இடத்தை பிடித்த குஜராத் அணி இந்த சீசனில் கடுமையாக திணறி வருகிறது.

5 ஆட்டத்தில் அந்த அணி 4 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டி யலில் கடைசி இடம் வகிக்கிறது. வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியாமல் குஜராத் அணி நெருக்கடியை சந்தித்துள்ளது.

பேட்டிங் வலுவாக இருந்தாலும் பந்து வீச்சு படுமோசமாக அமைந் துள்ளது. அதிலும் சுழற்பந்து வீச்சு அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜடேஜா வருகைக்கு பின்னரும் அணியின் பந்து வீச்சில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஜடேஜா பெங்களூரு அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 57 ரன்கள் தாரை வார்த்தார்.

கொல்கத்தா அணியில் தனிப்பட்ட வீரர் என்று யாரும் இல்லாமல் ஆட்டத்துக்கு ஆட்டம் ஒவ்வொரு வீரர் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடிக்கொடுக்கின்றனர். இதுவே அணி எந்விதமான தடை களையும் உடைத்தெறிந்து வெற்றி களை குவிக்க காரணமாக அமைந்துள்ளது.

அதிரடி வீரரான கிறிஸ்லின் காயம் காரணமாக விளையாடாத நிலையில் டெல்லி அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணி 21 ரண்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்த போதிலும் மணீஷ் பாண்டே (47 பந்துகளில் 69 ரன்கள்), யூசுப் பதான் (36 பந்துகளில் 59 ரன்கள்) ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்து மிரட்டியது.

இந்த ஆட்டத்தில் எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடிய மணீஷ் பாண்டே, அமித் மிஸ்ரா வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். 3 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் கொல்கத்தா அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் காலின் டி கிராண்ட்ஹோம் நீக்கப்பட வாய்ப் புள்ளது. அவர் 3 ஆட்டங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவருக்கு பதிலாக வங்க தேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல்-ஹசன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல் 6-ம் நிலை வீரராக களமிறங்கி வரும் சூர்ய குமார் யாதவ், இந்த சீசனில் இதுவரை பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் அவரும் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்படக்கூடும் என தெரிகிறது. சுழற்பந்து வீச்சில் சுனில் நரேன், குல்தீப் யாதவ், யூசுப் பதான் கூட்டணி நெருக்கடி கொடுக்கக்கூடும்.

இந்த மூவர் கூட்டணி, ஈடன் கார்டனில் கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிராக 9 ஓவர்கள் வீசி 43 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. மேலும் வார்னர், ஷிகர் தவண், தீபக் ஹூடா ஆகிய முன்னணி வீரர்களையும் ஆட்டமிழக்க செய்திருந்தனர். மூவர் கூட்டணியின் நேர்த்தியான பந்து வீச்சால் இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.

குஜராத் அணியில் இன்றைய ஆட்டத்தில் அதிக மாற்றங்கள் இருக்கக்கூடும். டுவைன் ஸ்மித், ஆரோன் பின்ச் ஆகியோர் கடந்த சில ஆட்டங்களில் சோபிக்க தவறினர். இதனால் இவர்களுக்கு பதிலாக ஜேசன் ராய், ஜேம்ஸ் பாக்னர் ஆகியோர் இடம் பெறக்கூடும். தொடக்க வீரராக பிரண்டன் மெக்கலத்துடன் இளம் வீரரான ஜார்க்கண்டை சேர்ந்த இஷான் கிஷன் களமிறங்க வாய்ப்புள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிராக இஷான் கிஷன் கடைசி கட்டத்தில் 16 பந்துகளில் 39 ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா முக்கியமான கட்டத்தில் மந்தமாக விளையாடி நெருக்கடியை அதிகரித்தார்.

22 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்த அவரது மந்தமான ஆட்டமும் தோல்விக்கான முக்கிய காரணி களுள் ஒன்றாக அமைந்தது. இதனால் இந்த விஷயத்தில் குஜராத் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். வேகப் பந்து வீச்சில் கேரளாவை சேர்ந்த பாசில் தம்பி சற்று நம்பிக்கை அளிப்பவராக உள்ளார்.

இந்த சீசனில் கொல்கத்தா - குஜராத் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி ருந்தது. இந்த ஆட்டத்தில் தான் கிறிஸ்லின், காம்பீர் ஜோடி 184 ரன்கள் இலக்கை அசாத்தியமாக விக்கெட் இழப்பின்றி துரத்தி சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அணிகள் விவரம்:

குஜராத் லயன்ஸ்:

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா, ஆன்ட்ரூ டை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad