டோனிக்கு எதிரான வழக்கு ரத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,



           ஆங்கில மாத இதழின் அட்டை பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை, விஷ்ணு போல் சித்தரித்து புகைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தில் டோனியின் கைகளில் பல விளம்பர பொருட்கள் இருப்பது போல் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. ‘இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இருக்கிறது’ என்று சமூக ஆர்வலர் சார்பில் டோனி மற்றும் படத்தை பிரசுரித்த பத்திரிகையின் ஆசிரியருக்கு எதிராக கர்நாடகா மற்றும் ஆந்திரா கோர்ட்டுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் நடந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ரத்து செய்தது. இந்த நிலையில் ஆந்திராவில் தொடரப்பட்ட வழக்கின் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், டோனி மீதான ஆந்திர கோர்ட்டின் வழக்கு விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டனர். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url