விராட் கோஹ்லி எடுத்த அதிரடி முடிவு






ஆஸ்திரேலிய  அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.  அதன் பின் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.  அப்போட்டியில் தலைவராக ரஹானே செயல்பட்டார், இந்திய அணியும் தொடரை வென்றது.  இத்தொடர் முடிந்தவுடன் இந்தியாவில் பத்தாவது ஐபிஎல் தொடரும் தொடங்கியது.  இதில் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தலைவராக விராட் கோஹ்லி செயல்பட்டு வந்தார்.  ஆஸ்திரேலிய  தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.  இந்நிலையில் கோஹ்லி இதுகுறித்து கூறுகையில், இந்திய கிரிக்கெட்டிற்குதான் முன்னுரிமை கொடுக்கிறேன்.  வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை எதிர்நோக்கி இருக்கிறேன். இதனால் நான் எந்தவொரு கடின முடிவையும் எடுக்க விரும்பவில்லை.  மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான எந்த தேதியையும் நான் முடிவு செய்யவில்லை.  நான் 120 சதவீதம் உடற்தகுதியை பெற்ற பின்னர்தான் அணிக்கு திரும்புவேன். நான் முடிந்த வரை விரைவில் மைதானத்திற்கு திரும்ப விரும்புகிறேன்  இதனால் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு விராட் கோஹ்லி அவசரம் காட்டமாட்டார் என்று கூறப்படுகிறது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url