Type Here to Get Search Results !

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா அணி வெளியேற்றம்

                        சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஜூவென்டஸ் அணிக்கு எதிரான 2-வது கட்ட கால் இறுதி ஆட்டத்தை பார்சிலோனா அணி கோல்களின்றி டிராவில் முடித்தது. முதல் கட்ட கால் இறுதியில் பார்சிலோனா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்ததால் அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.



கேம்ப் நவ் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது கட்ட கால் இறுதியில் ஜூவென்டஸ் அணி வீரர்களின் தடுப்பு அரண்களை மீறி பார்சிலோனா அணி நட்சத்திர வீரர்களான நெய்மர், லயோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோரால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இதே மைதானத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 6-1 என்ற கோல் கணக்கில் பார்சி லோனா அணி வீரர்கள் பந்தாடியிருந்தனர். அந்த அணிக்கு எதிராக முதல் கட்ட ஆட்டத்தில் பார்சிலோனா 0-4 என தோல்வி கண்டிருந்தது.

இதனால் இதேபோன்ற பிரமிக் கத்தக்க வகையிலான ஆட்டத்தை பார்சிலோனா வீரர்கள் மீண்டும் வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் வெகுவாக நம்பியிருந் தனர். ஆனால் சொந்த மைதானத் தில் பார்சிலோனா வீரர்கள் கடும் ஏமாற்றம் அளித்தனர்.

ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மெஸ்ஸி இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தை விட்டு விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. எனினும் மெஸ்ஸி அடுத்தடுத்த நிமிடங்களில் போராடி னார். ஆனால் கோல் அடிக்கும் அவரது சில முயற்சிகளுக்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போனது.

2-வது பாதியில் ஜூவென்டஸ் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் வீரர் குவாட்ரடோ இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தின் அருகே விலகி சென்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகள் தரப் பிலும் கோல் ஏதும் அடிக்கப் படாததால் ஆட்டம் 0-0 என டிராவில் முடிவடைந்தது.

முதல் கட்ட கால் இறுதியில் 3-0 என ஜூவென்டஸ் அணி வெற்றி பெற்றிருந்ததால் அரை இறுதிக்கு முன்னேறியது. பார்சிலோனா அணி, சாம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ச்சியாக 2-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறி உள்ளது. கடந்த ஆண்டும் அந்த அணி கால் இறுதியில் தோல்வியை சந்தித்திருந்தது.

பார்சிலோனா அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு ஜூவென்டஸ் அணி பழிதீர்த்துக்கொண்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad