Type Here to Get Search Results !

சிங்கம் 4 கிடையாது : ஹரி உறுதி


சிங்கம் படத்தின் நான்காவது பாகத்தை எடுக்க மாட்டேன் என்றார் டைரக்டர் ஹரி. சூர்யா, அனுஷ்கா நடிப்பில் சிங்கம் படத்தின் 3 பாகங்களை ஹரி இயக்கினார். இந்நிலையில் அவர் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை விக்ரம், திரிஷா நடிப்பில் இயக்க உள்ளார். இதன் பிறகு மீண்டும் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை உருவாக்குகிறார். அது சிங்கம் 4 என தகவல் பரவியது. ஆனால் ஹரி அதை மறுத்துள்ளார். ‘சிங்கம் படத்தின் நான்காம் பாகம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை.

சூர்யாவுடன் மீண்டும் இணைந்து ஒரு படம் எடுக்கிறேன். சாமி 2வுக்கு பிறகு அந்த படம் தொடங்கும். ஆனால் அது சிங்கம் படங்களின் தொடர்ச்சி அல்ல. புதிய கதையாக இருக்கும். அதே நேரத்தில் எனது பாணியில் வேகமான திரைக்கதை ஓட்டத்துடன் கூடிய படமாக இருக்கும். ஆனால் அது போலீஸ் கதையாக இருக்காது” என்றார் ஹரி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad