இந்திய வீரரிடம் கூலாக பீர் கேட்ட ஸ்மித்
ஆஸ்திரேலிய அணியின் தலைவரான ஸ்மித், நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக இருந்த ரஹானேவிடம் பீர் கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இத்தொடர் ஆரம்பித்ததில் இருந்தே இந்திய அணி வீரர்களும், ஆஸ்திரேலிய அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர் .இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் தலைவராக செயல்பட்ட ரஹானேவிடம் அணுகிய ஸ்மித், உங்களோடு சேர்ந்து பீர் குடிக்க எங்கள் அணிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என கேட்டுள்ளார். இதை கேட்ட ரஹானே புன் சிரிப்புடன், கேட்டு சொல்கிறேன் என கூறியுள்ளார்