கோஹ்லி ஒரு சாட்டை மாதிரி முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் கருத்து
இந்திய அணியின் தலைவர் கோஹ்லி ஒரு சாட்டை மாதிரி என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெர்வ் ஹியூஸ் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இத்தொடரில் இரு அணி வீரர்களும் இதுவரை இல்லாத அளவிற்கு மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெர்வ் ஹியூஸ் கூறுகையில், இந்திய அணியின் தலைவர் கோஹ்லி, ஒரு சாட்டை மாதிரி, என்றும் அது நம் கையில் இருந்தால் தைரியமாகவும் எதிரில் இருந்தால் எதிரியாகவும் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.