ஐ.பி.எல் போட்டியில் விராட் கோஹ்லி விளையாட மாட்டார்





இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இந்த வருடம் இடம்பெறவுள்ள 10 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஆஸி அணியுடனான போட்டியில் கோஹ்லியின் வலது தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இவர் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  கோஹ்லி ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவராக இருப்பதுடன், அவர் ஐ.பி.எல். தொடரில் 973 ரன்களை  எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டியில் இவர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.  ஆனால், கோஹ்லி ஒரு போட்டியில் மாத்திரமே விளையாட மாட்டார் என பெங்களூர் அணி நிர்வாகம் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url