போல்டாக்கிய பந்துவீச்சாளரை அடித்து நொறுக்கிய வீரர்
ஆஸ்திரேலியாவில்இ டம்பெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் போல்டாக்கிய பந்துவீச்சாளரை பேட்டிங் வீரர் கோபத்தில் அடித்து கீழே தள்ளிய சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது, இதில் Yack-Eskdale அணிகள் மோதின. Yack அணி வீரர் பந்துவீச்சில், Eskdale ஆட்டக்காரர் போல்டாகி அவுட்டானார். விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் பந்துவீச்சாளர் கொண்டாடியதை கண்டு கடுப்பான பேட்டிங் வீரர், அவரை தோள்பட்டையால் இடித்து கீழே தள்ளினார். இதைக்கண்டு கோபமடைந்து பந்துவீச்சாளர் அணியை சேர்ந்த தடுப்பு வீரர், பேட்ஸ்மானை அடித்து கீழே தள்ளினார். இதனால், மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில், மைதானத்தில் பிரச்னையில் ஈடுபடும் வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.