டொனால்டு டிரம்பின் மறுபக்கம் அதிர்ச்சியில் உறைந்த ஆதரவாளர்கள்




அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ஊதியம் முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதில் இருந்து மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளால் அவர் மீதான எதிர்ப்பு குரல்கள் உலகெங்கும் ஓங்கி ஒலித்த வண்ணம் இருந்தாலும், அதில் அவர் அசராமல் தமது பணிகளை தோய்வின்றி செய்தே வருகிறார்.  இந்நிலையில் தமது ஊதியம் முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை அவரது செய்தித்தொடர்பாளர் சீன் ஸ்பைசர் உறுதிப்படுத்தியுள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை சமூக நலனுக்கு செலவழிக்கப்போவதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை தற்போது ஜனாதிபதி டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்.  ஜனாதிபதி டிரம்ப்புக்கு ஆண்டுக்கு 400,000 டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.60 கோடியே 74 லட்சம்) சம்பளம் கிடைக்கிறது.  முன்னதாக அமெரிக்க ஜனாதிபதிகளாக ‌இருந்த ஹெர்பெர்ட் ஹூவர் மற்றும் ஜான் கென்னடி ஆகியோரும் தங்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.  மட்டுமின்றி பெரும் செல்வந்தரான ஜனாதி டிரம்பின் சொத்து மதிப்பு 3.7 பில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url