பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்





சாட்டிலைட் பிரச்சனை தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தாணு மற்றும் பிரபல தொலைக்காட்சியை வெளுத்து வாங்கியுள்ளார் நடிகர் டி.ராஜேந்தர்.  வாலு படத்தை முதலில் வாங்கிக்கொள்வதாக சொன்ன டிவி பின்னர் வேண்டாம் என கூறிவிட்டது. சன் டிவி கொடுக்கவேண்டிய தொகையை சமரசம் பேசி வாங்கித்தருவதாக சொன்ன தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இதுவரை வாங்கி தரவில்லை.  'மேலும் ராயல்டி தொடர்பாக அந்த தொலைக்காட்சியுடன் போடப்பட்ட ஒரு அக்ரீமெண்ட் மூலம் சுமார் 1500 கோடிக்கும் மேல் வரவேண்டியுள்ளது, அதை பற்றி தாணு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சன் டிவியின் கைக்கூலியாக செயல்படுகிறார் அவர்' என டி.ஆர் குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் "அந்த டிவி பற்றி பேச நான் பயப்படவில்லை. என்ன செய்ய முடியும்? என்னை பற்றியும் சிம்பு பற்றியும் எந்த செய்தி வந்தாலும் போட மாட்டிர்கள். அதை பற்றி எனக்கு கவலை இல்லை" எனவும் கூறியுள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url