முரளி விஜய்யை கெட்ட வார்த்தையால் திட்டிய ஸ்மித்



ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் இந்திய வீரர் முரளி விஜய்யை கெட்ட வார்த்தையில் திட்டியது கமெராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தர்மசாலா டெஸ்ட் போட்டியின் போது அஸ்வின் ஓவரில் ஹாசல்வுட் அடித்த பந்தை முரளிவிஜய் கேட்ச் பிடித்தார்.  அப்போது பந்து தரையில் பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து 3-வது நடுவரிடம் நாடப்பட்டது. வீடியோவில் பந்து தரையில் பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 3வது நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்தார்.  முரளி விஜய் தரையில் பந்து பட்டதை கேட்ச் பிடித்து அவுட் கேட்டதால் வீரர்கள் அறையில் இருந்த ஆஸ்திரேலிய தலைவர் ஸ்மித் ஆவேசம் அடைந்தார்.  அவர் முரளிவிஜய்யை நோக்கி கெட்ட வார்த்தையால் திட்டினார். இச்சம்பவம் கமெராவில் பதிவானது. தற்போது, குறித்த காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url