ஆமையின் வயிற்றில் 5 கிலோ நாணயங்கள் மிரள வைத்த சம்பவம்
உலகில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுக்கான மோதல்கள் இன்றளவும் அதிகரித்து கொண்டு தான் வருகின்றது. ஆனால் விலங்கினங்களின் அழிவிற்கு பெரும்பங்கு வகிப்பது மனிதர்களின் லாப நோக்கமும், மூட நம்பிக்கைகளும் ஒரு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் தாய்லாந்தில் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் வசிக்கும் பெண் ஆமையின் வயிற்றில் அறுவைசிகிச்சை செய்தபோது சுமார் 5 கிலோ நாணயங்கள் அதன் வயிற்றில் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த ஆமை, மற்ற ஆமையை போல எளிதில் நீந்த முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. அதனால் அந்த பெண் ஆமையை சோதித்து பார்த்த போது, அதன் வயிற்றில் 915 அளவு கணம் கொணட நாணங்கள் அதன் வயிற்றில் இருந்தது தெரியவந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் நாணயங்களை ஆமைகள் வசிக்கும் குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் வீசினால் வாழ்நாள் அதிகரித்து, அதிர்ஷ்டம் வரும் என்பது ஒரு மூட நம்பிக்கையாக உள்ளது. இந்த நம்பிக்கையால் தாய்லாந்து நாட்டுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் என பலரும் இந்தக் கடல் ஆமை வாழ்ந்த குளத்தில் நாணயங்களை வீசியுள்ளனர். இதனால் இந்த பச்சைக் கடல் பெண் ஆமை வகையைச் சேர்ந்த இதனுடைய 80 ஆண்டுகளின் ஆயுட்காலத்தை குறைத்து விட்டது. எனவே 25 வயது கொண்ட இந்த பெண் ஆமையின் அறுவை சிகிச்சையை தாய்லாந்து நாட்டின் சுலாலாங்கார்ன் விலங்கியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 7 மணி நேரம் போராடி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இது பற்றிய செய்தி கடந்த மாதம் தாய்லாந்து நாட்டு மீடியாக்களில் தெரியவந்துள்ளதால், அந்நாட்டு மக்கள் அந்த ஆமையின் அறுவை சிகிச்சைக்காக பண உதவி செய்துள்ளனர். தற்போது அந்த பெண் ஆமை அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.