ரசிகர்கள் மகிழ்ச்சி எப்போதும் நம்பர் 1 என காட்டிய அஸ்வின்
ஐசிசி நேற்று வெளியிட்ட ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் அஷ்வின் ஒரு இடம் முன்னேறி 434 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளார். மேலும், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (403), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (360) புள்ளிகளையும் பெற்று அடுத்த இடங்களை பிடித்துள்ளனர். அத்துடன் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராத் கோஹ்லி (847) ஒரு இடம் பின் தங்கி 4ஆவது இடத்தில் உள்ளார். அந்த நிலையில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இவ்வாறே கடந்த வாரம் வெளியிடப்பட்ட பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் அஸ்வின் முதலிடம் வகிக்கிறார். அந்த வகையில் தமிழக வீரர் என்ற ரீதியில் அஸ்வின் முதலிடங்களை தக்கவைத்திருப்பது தமிழக இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.