Type Here to Get Search Results !

வீரப்பன் பற்றி புதிய திடுக்கிடும் தகவல்





சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க ஈரோடு தொழிலதிபர் ஒருவரே உதவியதாக அதிரடிப்படை தலைவராக இருந்த விஜயகுமார் வெளியிட இருக்கும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தொழிலதிபர் ஒருவர் உதவியதாகவும் கண் அறுவை சிகிச்சைக்கு வந்தபோது வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜயகுமார் தம்முடைய புத்தகத்தில் எழுதியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. 30 ஆண்டுகாலம் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு சவாலாக விளங்கியவர் சந்தனக் கடத்தல் வீரப்பன். 2004-ம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனையும் அவரது கூட்டாளிகளையும் அதிரடிப்படை சுட்டுக் கொன்றதாக அறிவித்தது. ஆனால் வீரப்பன் உயிருடன் பிடித்து கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை தொடர்ந்து வருகிறது. அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை 00:43 ரத்த வெள்ளத்தில் சசிகலாவின் கணவர் 00:44 சென்னை வரலாற்றில் முதல்முறையாக 192 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று- வீடியோ விஜயகுமார் புத்தகம் இந்த நிலையில் Veerappan: Chasing the Brigand என்ற தலைப்பில் அதிரடிப்படை தலைவராக இருந்த விஜயகுமார் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் வீரப்பன் பிடிபட்டதாக சொல்லப்படுவது குறித்து விஜயகுமார் எழுதியுள்ளதாவது: ஈரோடு தொழிலதிபர் ஈரோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வீரப்பனுக்கு நெருக்கமானவராக இருந்தார். அந்த தொழிலதிபதிரை அதிரடிப்படை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. வாக்குறுதிகள் அவர் மூலம் இலங்கையில் இருந்து ஆயுதங்கள் பெற்றுத்தரப்படும் என முதலில் வீரப்பனுக்கு உறுதிமொழி தரப்பட்டது; அத்துடன் வீரப்பனுக்கு திருச்சி அல்லது மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்ய உதவுவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. வெளியே வரவழைத்து சுட்டுக் கொலை பொதுவாக வீரப்பனை சந்திக்க செல்வோர் அந்த தொழிலதிபரிடம் இருந்து கிழிக்கப்பட்ட லாட்டரி சீட்டின் ஒரு பகுதியை வாங்கிச் செல்வர். அதைப் பார்த்துதான் வீரப்பன் நம்பிக்கைக்குரிய நபர் என சந்திக்கவே ஒப்புக் கொள்வார். இதையும் அதிரடிப்படை கண்டுபிடித்து வீரப்பனை காட்டை விட்டு வெளியேவரச் செய்து சுட்டுக் கொன்றது. இவ்வாறு விஜயகுமார் தம்முடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad