Type Here to Get Search Results !

டொனால்டு டிரம்பால் அமெரிக்காவை விட்டு துரத்தப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்





பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் டிரம்பின் அதிரடி அறிவிப்பால் அமெரிக்காவிலிருந்து வெளியேறி உள்ளார்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது என அதிரடி காட்டியிருந்தார்.  இதையடுத்து ICC Americas உள்ளூர் அணிக்காக விளையாடி வரும் Fahad Babar (24) அவசர அவசரமாக அமெரிக்காவிலிருந்து தன் சொந்த நாடான பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.  இது குறித்து அவர் வழக்கறிஞர் William McClean கூறுகையில், Fahad டிரம்ப் தடைவிதித்த அந்த 7 நாட்டை சேர்ந்தவர் இல்லை.  ஆனாலும் அவர் நாடு அந்த நாடுகளின் பக்கத்தில் தான் உள்ளது. மேலும் Fahad அமெரிக்காவில் விளையாடினாலும் அவர் அமெரிக்கர் கிடையாது.  அதனால் பாதுகாப்பு கருதி தான் விளையாடி கொண்டிருந்த சுற்றுபயணத்தை பாதியிலே முடித்து விட்டு அவர் கிளம்பிவிட்டதாக William கூறியுள்ளார்.  திறமையான விளையாட்டு வீரரான Fahad Babar கடந்த 2015ல் நடைபெற்ற ICC Americas T20 போட்டிகளில் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad