Type Here to Get Search Results !

இளம் வயதில் மரணம் ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா





மரணம் என்பது எங்கு எப்போது எப்படி ஏற்படும் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு சிலர் அவர்களின் தவறான வாழ்க்கை முறையினால் மரணத்தை தானே வரவழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் இளமையாக இருக்கும்போதே மரணமடைந்துவிடுகிறார்கள்.  அப்படி இருக்கும் போது, இளமையாக இருக்கும் ஒருவருக்கு எதனால் மரணம் ஏற்படுகிறது என்பதற்கான ஒருசில காரணங்களை விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இளம் வயதில் மரணம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?  ஒருவருடைய ஆயுட்காலம் என்பது 75% அவர்களின் மரபணுக்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே நமது உறவினர்கள் 80 வயது வரை வாழ்ந்திருந்தால், நமது ஆரோக்கியமான பழக்கவழக்கம் மூலம் நாமும் அந்த ஆயுட்காலம் வரை இருக்க முடியும்.  கலிஃபோனியா பல்கலைக்கழகத்தில், செய்த ஆய்வின் மூலம் நாம் எப்போதும் உடல் மற்றும் மனதை ஓய்வில்லாமல் வைத்திருந்தால் விரைவில் நம்மை மரணம் நெருங்காது என்று கூறுகின்றார்கள்.  அலுவலகத்தில் வேலை செய்யும் போது, அல்லது வீட்டில் தொடர்ந்து அமர்ந்துக் கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தாலும் அது நமது ஆயுளை குறைக்கும். எனெனில் தொடர்ந்து 10 மணி நேரம் அமர்ந்தபடி இருந்தால், அது நமது டிஎன்ஏ-வை பாதித்து விரைவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.  நாம் விரைவில் மரணத்தை தழுவதற்கு, மெதுவாக நடப்பதும் ஒருவித அறிகுறியாகும். ஏனெனில் இது நமது உடல் தசைகள், இதயம், நுரையீரல் ஆகியவற்றின் ஆரோக்கியமின்மைக்கான அறிகுறிகளாகும்.  நம்மால் குறைந்த எடை கொண்ட பொருட்களைக் கூட தூக்க முடியவில்லை என்றால் அது கூட விரைவில் மரணம் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும். ஏனெனில் கால் எலும்புகளின் பலவீனம், அதிகக் கொழுப்புக்கள் காரணமாகும்.  மார்க்கெட்டில் பாக்கெட்டுகளில், விற்கப்படும் பெரும்பாலான நொறுக்குத் தீனிகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நமது மரபணுக்களின் சக்தியை மாற்றி, விரைவில் மரணத்தை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad