வாட்ஸ் அப் பயன்படுத்துறீங்களா? தீவிரவாதிகள் இணையலாம்
வாட்ஸ் அப்பில் ஒரு குரூப்பில் சேர வேண்டும் என்றால் அட்மின் மட்டுமே புதிய நபரை இணைக்க முடியும். ஆனால் தற்போது INVITE TO GROUP VIA LINK என்பதை கொடுப்பதன் மூலம் ஈஸியாக இணைந்து கொள்ளலாம். அட்மின் அனுமதி இல்லாமல் இணைந்து கொள்ள முடியும் என்பதால் பாதுகாப்பான நபர்களிடம் மட்டுமே ஷேர் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக லிங்க் சமூகவலைத்தளங்களில் ஒருவேளை பரவும் பட்சத்தில் ஹேக்கர்கள், தீவிரவாதிகள், சமூக விரோதிகள் சேர வாய்ப்பாக அமையும். இணைந்து கொண்டபின் உங்களுடைய தகவல்களை தவறான வழியில் பயன்படுத்த நேரிடும். இதேபோன்று மற்ற நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால், அந்த குரூப் எதைப் பற்றியது, அதன் நோக்கம் என்ன, அதனால் என்ன பயன் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.