நயன்தாராவின் காதல் தோல்வி சொல்லும் பாடம் இதுதான்




காதலில் தோற்றால் ஏதோ வாழ்க்கையிலேயே தோற்றுவிட்டமாதிரி புலம்புவது, இருட்டி அறையில் அடைந்து கிடப்பது போன்றவற்றை தான் நாம் இதுவரை திரையில் பார்த்திருப்போம். ஆனால், இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தங்கள் நிஜவாழ்வில் வெற்றி நடைபோட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.  சொல்லப்போனால், திரையுலகில் ஜொலிப்பவர்கள் தங்களது காதல் தோல்விக்கு பின்னர் தான் தொழிலில் உயர்வு கண்டு, புகழையும் பணத்தையும் சம்பாதிக்கிறார்கள். இதில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா, தன்னைப்பற்றிய தவறான செய்திகள் வெளிவந்தாலும், காதல் முறிவு ஏற்பட்டாலும் தனது தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவரது தொழில்பக்தி அனைவரையும் மெய்சிலிக்க வைக்கிறது.  சொந்த வாழ்க்கை வேறு, தொழில் சார்ந்த வாழ்க்கை வேறு. நாம் காதலித்து பிரிந்த நபருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் நேரிடும் போது, தொழில் இருந்து பின் வாங்குவது தவறு. வேலையை, வேலையாக மட்டுமே பார்க்க வேண்டும்.  சொந்த வாழ்க்கையை வேலையில் பிணைத்து, தொழிலில் கோட்டை விட்டுவிட கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார். என்னதான் காதல் தோல்வியால் கவலைகள் இருந்தாலும், அதனைப்பற்றி நேரலை நிகழ்ச்சிகளில் தைரியமாக சொல்வார்.  படப்பிடிப்பு தளத்தில் என்னதான் அனைவரோடும் நெருங்கி பழகினாலும் பணி என்று வரும்போது நயன்தாரா பக்கா பார்ட்டி. பணி மட்டுமில்லை பணமும் சேர்த்துதான். தான் எந்த அளவுக்கு உழைக்கிறாரோ, அதற்கு ஏற்றவாறு சம்பவ விஷயத்திலும் கரார் பார்ட்டியாக இருக்கிறார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url