Type Here to Get Search Results !

வீடு வாங்க வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா?.. ஒரு நிமிடம் ஒதுக்கி இதைப் படிங்க




சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வங்கியில் கடன் வாங்குகிறோம். அந்தக் கடனை வாங்கிய பிறகு பல்வேறு காரணங்களினால் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுகிறோம்.  வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும் போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?.

கடன் காலம்!

“வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது முக்கிய மாகக் கவனிக்க வேண்டிது, கடனுக்கான தவணைக் காலம். நீங்கள் கடன் வாங்கும்போது எத்தனை வருடங்கள் வாங்கு கிறீர்களோ, அந்தக் காலத்துக்குத் தான் கடன் கிடைக்கும். அதாவது, 20 வருடம் கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் 5 வருடம் கடனை திரும்பச் செலுத்திவிட் டீர்கள். இப்போது வேறு வங்கிக்குக் கடனை மாற்றுகிறீர்கள் எனில், மீதமுள்ள 15 வருடத்துக்குத்தான் கடன் கிடைக்கும். அதற்குள் கடனை திரும்பச் செலுத்திவிடுவது முக்கியம். இதற்குள் வீட்டுக் கடனை திரும்பச் செலுத்திவிட முடியுமா என்பதைப் பார்ப்பது அவசியம்.

எப்போது மாறலாம்?

வீட்டுக் கடன் வாங்கியபிறகு, வேறு வங்கிக்கு அந்தக் கடனை மாற்றும்போது எந்த நேரத்தில் அதைச் செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். காரணம், கடன் வாங்கி, மிகவும் குறைவான தொகை பாக்கி இருக்கும் சமயத்தில், அந்தக் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது தவறு.  உங்களின் மொத்தக் கடனில் 80 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமாகக் கடன் தொகை பாக்கி இருக்கும்போது அதை வேறு வங்கிக்கு மாற்றுவது சரியான முடிவாக இருக்கும்.

வட்டி விகிதம்!

வீட்டுக் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் வட்டி விகிதம் குறைக்கப்படும் சமயங்களில் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கடனை மாற்றுகிறார்கள். அதாவது, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும். கடன் வாங்கும்போது அவசரத் தில் அல்லது வேறு வழியில்லாமல் அதிக வட்டிக்கு கடன் வாங்கியிருப்போம்.

இப்படி மாற்றும் சமயங்களில், நீங்கள் ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கிய வங்கியில் இருந்த வட்டி விகிதத்தைவிட நீங்கள் புதிதாக மாற நினைக்கும் வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருக்கிறதா என்பதை முதலிலேயே உறுதி செய்து கொள்வது நல்லது. அந்தக் குறைவான வட்டியும் மற்ற வங்கி களுடன் ஒப்பிடுகையில் நீண்ட காலத்தில் தரப்படுமா என்பதைப் பார்ப்பதும் அவசியம்.

கட்டணம்!

ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கடனை மாற்றும்போது என்னென்ன கட்டணங்கள் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்வது முக்கியம். ஏனெனில், பல நேரங்களில் இந்தக் கட்டணங் கள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது, அந்த வங்கி உங்களை புதிய வாடிக்கையாளராகவே கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

இதனால் வீட்டின் மதிப்பை அறிந்துகொள்வதற்குக் கட்டண மும், வழக்கறிஞரிடம் அந்தச் சொத்து குறித்த கருத்து கேட்பதற்கு செயல்பாட்டுக் கட்டணமும் செலுத்த வேண்டும். மேலும், பழைய வங்கியில் உள்ள அடமானத்தை ரத்து செய்வதற்கு, மீண்டும் அந்தப் பத்திரத்தை பதிவு செய்வதற்கு எனக் கட்டணங்கள் இருக்கும். அதை யும் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

கூடுதல் கடன்!

ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கடனை மாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதல் கடனுக்காக வங்கி மாறுகிறார்கள்.  கூடுதலாக வாங்கும் கடனுக்கு வரிச் சலுகை பெறமுடியாது. அதோடு, அந்தக் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இந்தக் காரணத்துக்காக மட்டும் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சில நேரங்களில் ஏஜென்ட் சொல்வதைக் கேட்டுத் தேவையில்லாமல் கூடுதல் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.  கடனை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும் போது, நீங்கள் வாங்கியுள்ள வீட்டுக் கடன் அந்தப் புதிய வங்கியின் அப்ரூவலில் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். அந்த வங்கியின் அப்ரூவலில் இருந்தால், அதற்குச் சில சலுகைகளுடன் வங்கியானது கடன் வழங்க வாய்ப்பு இருக்கிறது.

ஆவணங்கள்!

கடன் வாங்கும் போது வங்கிகள் சில ஆவணங்களைக் கட்டாயமாக கேட்கும். அந்த ஆவணங்கள் எல்லாம் உங்களிடம் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். சில அடிப்படை ஆவணங்கள் இல்லாதபட்சத்தில், ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற நினைப்பது வீண்தான்’’

வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்ற நினைப்பவர்கள் இதையெல்லாம் கவனிக்கலாமே!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad