Type Here to Get Search Results !

Buy Ravaவை டிரென்டிங்கில் விட்ட அஜித் ரசிகர்கள்






ஒரு 5 மாத காலமாக எந்த சண்டையும் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் கூட அமைதியாக இருந்தது. ஆனால், நேற்று மீண்டும் அவர்களது சண்டை ஆரம்பமாகிவிட்டது. விஜய் படத்தின் டைட்டிலை அறிவித்துவிட்டார்கள் அல்லவா, கேட்கவா வேண்டும். பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் டைட்டில்  பைரவா என்பதை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்கள். அவ்வளவுதான் ஐந்து மாத காலமாக மறந்து போயிருந்த சண்டையை விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஆரம்பித்துவிட்டார்கள். பைரவா  என்ற தலைப்பை சமூக வலைத்தளங்களில் டிரென்டிங்கில் விட்டார்கள் விஜய் ரசிகர்கள். அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா,  பைரவா வைப் பிரித்து  பை ரவா அதாவது சமையலுக்கும், உப்புமாவுக்கும் பயன்படுத்தும்  ரவையை வாங்கி வா  என்ற அர்த்தத்தில்  ;Buy Rava ; என்பதை ஏட்டிக்குப் போட்டியாக டிரென்டிங்கில் விட்டார்கள். அது மட்டுமா  பைரவா வைக் கிண்டலடிக்கும் விதவிதமான மீம்ஸ்களையும், ஜோக்குகளையும் உருவாக்கி பரவ வைத்தார்கள். அதில் சில வைரலாகப் பரவின. படங்களுக்கு நகைச்சுவைப் பஞ்சம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் இப்படி மீம்ஸ்களை உருவாக்குபவர்களைப் பிடித்தாலே போதும் புதுப்புது நகைச்சுவை கிடைத்துவிடும். இன்னும் சில நாட்களுக்கு பைரவா மீம்ஸ்களின் பரவல் அதிகமாகவே இருக்கும்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad