தோல்வி அடைந்த நபரை உற்சாகப்படுத்திய ரசிகர்கள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டென்னிஸ் தொடரான “யூ.எஸ் ஓபன்” தொடர் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் ஆண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவின் ஜூவான் மார்டின் “டெல் போட்ரோ”, சுவிட்சர்லாந்தின் “வாவ்ரின்காவிடம்” 6-7, 6-4, 3-6, 2-6 என்ற செட்களில் தோல்வியை தழுவினார். இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத போட்ரோ அழுதுவிட்டார்.இதைக்கண்ட அமெரிக்க ரசிகர்கள் அவரை உடனடியாக ஆறுதல்படுத்த எழுந்து நின்று பலமாக கைதட்டினர். இதன் பின் போட்ரோ இயல்பான நிலைக்கு திரும்பினார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த போட்ரோ, இத்தொடரில் ரசிகர்களின் எனக்கு அளித்த ஆதரவினை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. நான் போட்டியில் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் இந்த சம்பவத்தை எனது வாழ்நாளில் மறக்கவே முடியாது. இது போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெரியது. ரசிகர்களிடம் இப்படி ஒரு பாராட்டை நான் பெற நிச்சயம் பெருமைப்படுகின்றேன். ரசிகர்கள் என்னை மகிழ்ச்சி அடைய செய்துவிட்டார்கள் என கூறினார்.