Type Here to Get Search Results !

உங்களுக்கு மூளை இல்லைன்னு திட்றாங்களா?அறிவாளியாக இதை சாப்பிடுங்க




மூளை மழுங்கிப் போவது என்பது மூளையின் செல்கள் அழியாமல் இருப்பதுதான். மூளை செல்களுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்கும்போதும், மூளைக்கும் போதிய போஷாக்கு கிடைக்கும்போதும், பலம் பெறுகின்றன. இதனால் நம்ம ஞாபக சக்தியும், அறிவுத்திறனும் மேம்படும்.

கர்ப்பமாக இருக்கும்போது, அம்மா சாப்பிடும் உணவு குழந்தையின் அறிவுத்திறனை வளர்க்கின்றன என்பது 100 சதவீதம் உண்மை.


நல்ல காய்கறிகள், பழங்கள், நட்ஸ் சாப்பிடும் தாயிற்கு அதீத புத்திசாலியுடன் குழந்தைகள் பிறக்கிறார்கள்.
பிறந்தாச்சு , வளர்ந்தாச்சு. இனி எப்படி அறிவாளி ஆகிறது என கேக்கறீங்களா? இங்க சொல்லப்படீடிருக்கிற உணவை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கே இவ்ளோ அறிவா என வியப்பீர்கள்

ஆக்ஸிஜன் :

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிக்கின்றது. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதபோதுதான் மூளை சோம்பேறித்தனப்பட்டு கொட்டாவியை தருகிறது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க விடமின் ஏ, ஈ மற்றும் பி காப்ளக்ஸ் வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

 காச் மூச் கத்துபவரா நீங்கள் :

சிலர் பொதுவெளியில் தங்களை மறந்து காச் மூச்சென்று கத்திவிடுவார்கள். பிறகு அதனை நினைத்து வருத்தப்படுவார்கள். அவர்கள் அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு ஆகியவ்ற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகள் கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்

 தன்னம்பிக்கை ஞாபக சக்தி வளர :

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. இது ஞாபக சக்தியையும் அதிகப்படுத்துகின்றது

 இந்த விட்டமின்கள் அவசியம் தேவை :

 சில வேலைகளை எப்படி முடிப்பது அல்லது ஆரம்பிப்பது என பல குழப்பங்களுடனே வேலை செய்து தோல்வியை தழுபவர்கள் நம்முள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் பி-6, பி-12 மற்றும் ஃபோலேட் ஆகிய இந்த மூன்று பி காப்ளக்ஸ் விட்டமின்களை எடுத்துக் கொண்டால், நரம்புகள் ஊக்கம் பெற்று தெளிவாக தகவல்களை கொண்டு போய் சேர்ப்பதால், மூளை அமைதியுடனும், உத்வேகத்துடனும் செயல்படும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

 நட்ஸ் :

 தினமும் நட்ஸ் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரித்து , மூளை அமைதிகாக்கிறது. பாதாம் மூளைக்கு ரத்தத்தை அதிகம் கொண்டு செல்கிரது. வால் நட்ஸில் ஒமெகா 3 அமிலம் உள்ளது









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad