Type Here to Get Search Results !

தெலுங்கில் மார்க்கெட்டை இழந்த விக்ரம்





விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள இருமுகன் படத்தின் டிரைலர் மூன்று நாட்களுக்கு முன் யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பார்வைகளைக் கடந்த டிரைலர் மூன்று நாட்களில் 30 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. விக்ரமின் இரு வேடத் தோற்றமும், நயன்தாராவின் கிளாமரும் டிரைலரைத் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் விதத்தில் இருப்பதே அதற்குக் காரணம். ஐ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்த  10 எண்றதுக்குள்ள  படத்தின் தோல்வி விக்ரமின் மார்க்கெட்டைப் பாதித்திருந்த நிலையில்  இருமுகன் படம் மீண்டும் அவரை பழைய நிலைக்கு உயர்த்திவிடும் என்றும் படக்குழுவினர் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்  இருமுகன்  படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது தமிழ், மற்றும் தெலுங்குத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 30 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால், இருமுகன்படத்தின் தெலுங்கு உரிமை வெறும் 5 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளதாம். தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆகும் படங்களின் உரிமையில் இன்றைய நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா ஆகியோரே முன்னணியில் உள்ளனர். ஐ படத்தின் உரிமை அவ்வளவு விலைக்கு விற்கப்பட்டதற்குக் காரணம் விக்ரம் அல்ல, ஷங்கர்தான் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad