Type Here to Get Search Results !

உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு சத்துக்களா




உருளைக்கிழங்கு உயர்தரமான சத்துணவு கொண்ட காய்கறி ஆகும்.  100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். மேலும் 100 கிராம் கிழங்கில் 22.6% கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.  எனவே உடலுக்கு உடனே சக்தி கிடைத்து விடுகிறது. புரதம் 1.6% உள்ளது. பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஏ, பி, சி முதலியவையும் போதிய அளவில் உள்ளன.  வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சுண்ணாம்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளன. உங்கள் உடலில் அதிகமாகப் புளிப்பு அமிலங்கள் சேர்ந்தால் அவைகளை இது வெளியேற்றிவிடுகிறது. அதுபோன்று உருளைக்கிழங்கு தோலிலும் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன

உருளைக் கிழங்கு தோலில் இருக்கும் அபரிமிதமான பொட்டாஷியம் சத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.

தோலில் உள்ள நார்ச்சத்து, ரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

உருளைக் கிழங்கு தோல், ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.

உருளைக் கிழங்கு தோலில் விட்டமின், 'பி6' அதிகம் உள்ளது. அது மூளையில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களான, செரோடோனின், டோபோமைன் உருவாக உதவும். இந்த ஹார்மோன், நம்முடைய நடத்தை, துாக்கம், பசி உணர்வு, செரிமானம், நினைவாற்றல் என்று பலவற்றையும் கட்டுப்படுத்தக் கூடியது.

செரோடோனின் சுரப்பு குறைந்தால், மன அழுத்தம் ஏற்படும்.

உருளைக் கிழங்கு தோலில் விட்டமின் 'சி' அதிக அளவில் உள்ளது. பொட்டாஷியம் தவிர மெக்னீஷியம், ஜிங்க் போன்ற நுண்ணுாட்டச்சத்துக்கள் உள்ளன.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad