Type Here to Get Search Results !

ஜீவாவுக்கு ஜோடியாகும் அஜித்தின் தங்கை




நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘திருநாள்’ படம் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ஜீவா, ‘கவலை வேண்டாம்’, ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.  இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீவா நடிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற படம் உருவாகப்போவதாக போஸ்டர்கள் வெளிவந்தது. இப்படத்தை எம்.ஜே.அருண் என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் நாயகியாக பிரபல நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது.  இந்நிலையில், தற்போது இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக லட்சுமிமேனனை நடிக்க வைக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. லட்சுமிமேனன் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் ‘மிருதன்’. இப்படத்தை தொடர்ந்து ‘சிப்பாய்’, ‘ரெக்க’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.  லட்சுமிமேனன், அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வேதாளம்’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad